பதவி விலகிய நவ்ஜோத் சிங் சித்து; காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டம் என்ன?

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் விலகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து நேற்று விலகினார். இதையடுத்து, அவரை சமாதானப்படுத்த கட்சி சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், தனது முடிவை மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுவருகிறது. இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த குல்ஜித் சிங் நக்ரா, நாடாளுமன்ற உறுப்பினர் ரவ்நீத் சிங் பிட்டு ஆகியோரில் எவரேனும் ஒருவரை தலைவராக நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

முன்னதாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர் சித்துவை சமாதானப்படுத்த அவரின் வீட்டுற்கு சென்றிருந்தனர். ராஜிநாமாவை திரும்ப பெறக் கோரி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனாம், இம்முயற்சிகள் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. அதேபோல், மேலிடம் சார்பாக சித்துவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஸ் ரவாத் பஞ்சாப் செல்வது வழக்கம். இம்முறை, காங்கிரஸ் கட்சியின் மேலிடம் சார்பாக முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னியே களத்தில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில், இன்று மதியம் சன்னி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சாப் அமைச்சரவையில் சில அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தியில் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவந்தது. 

ஆனால், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி சித்துவுக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். கட்சி, ஆட்சி சம்மந்தப்பட்ட பல முடிவுகள் சித்துவின் ஆலோசனையின்பேரில் எடுக்கப்பட்டுவந்த நிலையில், அரசின் அமைப்புகளில் மேற்கொண்ட நியமனங்களில் அவரின் விருப்பத்திற்கு எதிராக கட்சி சில நியமனங்களை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சித்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாநில அமைச்சர், கட்சியின் நிர்வாகிகள் மூவர் தங்களின் பதவிகளிலிலிருந்து விலகியுள்ளனர். இச்சூழலில், தில்லியில் உள்ள அமரீந்தர் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com