கபில் சிபல் வீட்டின் வெளியே காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்!

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய மூத்த தலைவர் கபில் சிபல் வீட்டின் வெளியே கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கபில் சிபல் வீட்டின் வெளியே காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்!


காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய மூத்த தலைவர் கபில் சிபல் வீட்டின் வெளியே கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜிநாமாவைத் தொடர்ந்து, கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதனிடையே, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புதன்கிழமை சந்தித்தார்.

இந்த விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியது:

"காங்கிரஸ் கட்சிக்குத் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பவரே இல்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. நாங்கள் ஜி-23 குழுவைச் சேர்ந்தவர்கள். கீழ்படிபவர்கள் அல்ல. பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்போம்.

தலைவர்கள் வெளியேறுவதில் நம் தவறும் இருக்கிறதா என்பதை நாம் ஆராய வேண்டும்? உடனடியாக காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்ட வேண்டும். தலைவர்களிடையே குறைந்தபட்சம் ஒரு உரையாடல் நடைபெற வேண்டும்.

நாங்கள் கட்சியின் சித்தாந்தத்தை விட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல மாட்டோம்" என்றார் சிபல்.

கபில் சிபலின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, தில்லி காங்கிரஸ் கட்சியினர் கபில் சிபல் வீட்டின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 'விரைவில் குணமடைய வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், தக்காளி வீசியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com