
கேரளத்தில் புதிதாக 15,914 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,03,871 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 15,914 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 2,332 பேரும், திரிச்சூரில் 1,918 பேரும், திருவனந்தபுரத்தில் 1,855 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,80,885 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 122 பேர் பலியானார்கள்.
இதையும் படிக்க- ‘ஒரு நாளைக்கு ரூ.1002 கோடி வருமானம்’: கரோனாவிலும் அதிகரித்த அதானியின் சொத்துமதிப்பு
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 25,087 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,42,529 சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 16,758 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 45,12,662 ஆக உயர்ந்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் 4,46,818 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.