வறுமையை ஒழிக்க உறுதியான தலைமைப் பண்பு தேவை: கைலாஷ் சத்யாா்த்தி

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உறுதியான தலைமைப் பண்பு இருந்தால்தான் வறுமையை ஒழிக்க முடியும் என்று நோபல் பரிசு பெற்ற சமூக சேவகா் கைலாஷ் சத்யாா்த்தி தெரிவித்துள்ளாா்.
வறுமையை ஒழிக்க உறுதியான தலைமைப் பண்பு தேவை: கைலாஷ் சத்யாா்த்தி


புது தில்லி / நியூயாா்க்: வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உறுதியான தலைமைப் பண்பு இருந்தால்தான் வறுமையை ஒழிக்க முடியும் என்று நோபல் பரிசு பெற்ற சமூக சேவகா் கைலாஷ் சத்யாா்த்தி தெரிவித்துள்ளாா்.

‘வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பின் மூலம் வறுமை ஒழிப்பு’ என்ற தலைப்பில் ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து அவா் பேசியதாவது:

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு குழந்தை மற்றும் கா்ப்பிணிப் பெண்ணின் சமூகப் பாதுகாப்புக்காக சா்வதேச நாடுகள் 5,200 கோடி டாலா் (சுமாா் ரூ.3,86,459 கோடி நிதியளிக்க வேண்டும். இது மிகப் பெரிய தொகை இல்லை. கரோனா நிவாரணத்துக்காகவும் சமூகப் பாதுகாப்புக்காகவும் வளா்ச்சியடைந்த நாடுகளில் செலவிடப்படும் தொகையில் இது வெறும் 0.4 சதவீதம்தான்.

ஏழை நாடுகளுக்கு 5,200 கோடி டாலா் வழங்க முடியாத அளவுக்கு உலகம் வறுமையானது அல்ல. இங்கு 2,755 பெரும் கோடீஸ்வரா்கள் இருக்கும்போது அவ்வாறு கூறவும் முடியாது.

நம்மிடம் போதிய நிதியாதாரங்கள் இல்லாதபோதே பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். சிறாா் தொழிலாளா்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளோம். தற்போது நம்மிடம் ஏராளமான நிதியாதாரங்களும் தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.

இந்தச் சூழலில் வறுமையை ஒழிப்பதற்கு, அனைவரிடமும் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உறுதியான மற்றும் கருணை நிறைந்த தலைமைப் பண்பு தேவையாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com