உத்தரகண்ட்டில் மின் கட்டணம் 2.68% உயர்வு

உத்தரகண்ட் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய மின் கட்டணத்தை  2.68 சதவீதம் அதிகரித்து இன்று அறிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டேராடூன் (உத்தரகண்ட்): உத்தரகண்ட் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய மின் கட்டணத்தை  2.68 சதவீதம் அதிகரித்து இன்று அறிவித்தது.

உத்தரகண்ட் மாநிலத்தில் மின் கட்டணம் 2.68 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநிலத்தில் உள்ள ரூ.4 லட்சம் BPL மற்றும் snowbound நுகர்வோருக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு மின் கட்டணம் 10 முதல் 30 பைசா வரை அதிகரித்துள்ளது என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் டி.பி. கைரோலா செய்தியாளர்களிடம் கூறினார்.

வீட்டு மின் கட்டணம் மாதத்திற்கு 100 யூனிட்கள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கான நிலையான கட்டணத்தை ஆணையம் அதிகரிக்கவில்லை. இருப்பினும், ஒரு யூனிட்டுக்கு 10 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

33 kV மின்னழுத்த அளவில் விநியோகத்தைப் பெறும் நுகர்வோருக்கு மின்னழுத்தத் தள்ளுபடியை 2.5 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக ஆணையம் உயர்த்தியுள்ளதாக டி.பி. கைரோலா தெரிவித்தார்.

புதிய திருத்தங்களின்படி, மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கான கட்டணத்தை மாற்றாமல் ரூ.5.50/kWh என ஆணையம் வைத்துள்ளது.

NEFT/RTGS/IMPS மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு முன்பு இருந்த 0.75 சதவீதத்திலிருந்து 1.25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

0-100 யூனிட்கள், 101-200 யூனிட்கள், 201-400 யூனிட்கள், 400 யூனிட்டுகளுக்கு மேல் முறையே ரூ.2.90, ரூ.4.20, ரூ.5.80, ரூ.6.55 என வீட்டு உபயோகக் கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக, இந்த வகைகளுக்கு ரூ.2.80, ரூ.4.00, ரூ.5.50 மற்றும் ரூ.6.25 என வீட்டு மின் கட்டணம் இருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com