கார் ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்த மாருதி சுஸுகி 

மாருதி சுஸுகி இந்தியா (எம்எஸ்ஐ), 2021 - 22ஆம் நிதியாண்டில் 2,38,376 கார்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்திருப்பதாகவும், இதுவரை இல்லாத வகையில் இது மிகப்பெரிய எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்த மாருதி சுஸுகி 
கார் ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்த மாருதி சுஸுகி 


புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் (எம்எஸ்ஐ), 2021 - 22ஆம் நிதியாண்டில் 2,38,376 கார்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்திருப்பதாகவும், இதுவரை இல்லாத வகையில் இது மிகப்பெரிய எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, இந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 26,496 கார்களை ஏற்றுமதி செய்திருப்பதாகவும், மாருதி சுஸுகி வரலாற்றில் ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கை இதுவாகும் என்றும் கூறப்படுகிறது.

காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் ஹிஷாசி டாக்யூச்சி இது குறித்துப் பேசுகையில், இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. நான் இந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளது என்றார்.

ஹிஷாசி டாக்யூச்சி
நிறுவனத்தின் நிா்வாக இயக்குநர் (எம்டி) மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த கெனிச்சி அயூகவாவின் பதவிக் காலம் 2022 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததையொட்டி, மாருதி சுஸுகியின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஹிஷாசி டாக்யூச்சி  நியமிக்கப்பட்டார். 2022 ஏப்ரல் 1 முதல் இவரது நியமனம் நடைமுறைக்கு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com