ராஜஸ்தான் மருத்துவர் தற்கொலை: போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் மருத்துவர்கள்

ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நாளை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனால், ராஜஸ்தானில் நாளை நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகக் கூடும் என்றும், மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

சிகிச்சை அளித்த கர்ப்பிணி மரணமடைந்ததைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் மருத்துவர் அர்ச்சனா ஷர்மா தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவர் அர்ச்சனா ஷர்மா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பாஜக தலைவர் ஜிதேந்திர கோத்வால் உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் தன்னை சிலர் துன்புறுத்துவதாக மருத்துவர் அர்ச்சனா ஷர்மா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதும், பாஜகவினர் சிலர் மிரட்டியதாலேயே மனைவி தற்கொலை செய்து  கொண்டதாகவும், கர்ப்பிணி மரணமடைந்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட அவரது குடும்பத்தினருடன் பாஜக தலைவர் கோத்வால் இருந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com