பிரதமர் மோடி-ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு

பிரதமர் மோடியை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் இன்று சந்தித்தார்
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் உடன் பிரதமர் மோடி
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் உடன் பிரதமர் மோடி


பிரதமர் மோடியை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் இன்று சந்தித்தார்

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் இரு நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்நிலையில், இன்று அவர்  வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவு மற்றும் மேம்பாடு, உக்ரைன், ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தோ-பசிபிக், ஆசியன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷிய வெளியுறவு அமைச்சரின் இந்தப் பயணத்தில் இந்தியாவுக்கான ராணுவத் தளவாட கொள்முதல் தொடா்பாக முக்கிய விவாதம் இடம்பெறும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெய்சங்கருடான சந்திப்பை முடித்த பின், பிரதமர் மோடியை சொ்கெய் லாவ்ரோவ் சந்தித்தார். 

இச்சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், உக்ரைனில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமரிடம் விளக்கினார்.

வன்முறையை முன்கூட்டியே நிறுத்தியிருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி அமைதி முயற்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,  உக்ரைனில் மனித உரிமை பிரச்னை தொடா்பாக ரஷியா ஐ.நா.வில் கொண்டு வந்த தீா்மானத்திலும் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்து தன் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது.

மேலும், போா் ஏற்பட்ட பிறகு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் 3 முறையும், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் இருமுறையும் பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com