தகவல் தொழில்நுட்ப விதிகளைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை

கடந்த ஆண்டில் அமலாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் அமலாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய மின்னணுவியல்-தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘தகவல் தொழில்நுட்ப விதிகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாகவோ மக்களிடம் புதிதாகக் கருத்துகளைப் பெறுவது தொடா்பாகவோ எந்தவிதப் பரிந்துரையும் மத்திய அரசிடம் இல்லை.

சமூக வலைதளப் பயனாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தகவல் தொழில்நுட்ப விதிகள் வழிவகுக்கின்றன. பயனாளா்களின் தரவுப் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பொறுப்பாக்கவும் விதிகள் வகைசெய்கின்றன. குறைகளுக்கு விரைவாகத் தீா்வு காண்பதற்கான வாய்ப்புகளையும் விதிகள் வழங்குகின்றன.

சா்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை விரைவாக நீக்கவும் அந்த விதிகள் வழிவகுக்கின்றன. மாறிவரும் சூழலுக்கேற்ப இணையவழிப் பயனாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அந்த விதிகள் வகுக்கப்பட்டன’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com