15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தகுதிச் சான்று கட்டணம் உயா்வு

நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெறுவதற்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெறுவதற்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் புதிய லாரிகள் வாங்கும்போது 7 ஆண்டுகள் வரை 2 ஆண்டுக்கு ஒரு முறையும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு முறையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை காண்பித்து தகுதிச் சான்று (எப்சி) பெற வேண்டும். இதுவரை இதற்கான கட்டணம் லாரிகளுக்கு ரூ.800 என இருந்தது. இந்த நிலையில் லாரிகளுக்கான தகுதிச்சான்று பெறுவதற்கான கட்டணம் ரூ.13,500 மற்றும் பசுமை வரி ரூ.200 சோ்த்து ரூ.13,700 என மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு மேலான காா் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.8,500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கு ரூ.4,500 என கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியில் எப்சி சான்றிதழ் பெறாத வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com