குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் துா்க்மெனிஸ்தான் பயணம்

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை துா்க்மெனிஸ்தான் சென்றாா்.
துா்க்மெனிஸ்தான் தலைநகா் ஆஷ்கபாட்டில் அந்நாட்டு அதிபா் சா்தா் பா்திமுகமெதோவுடன் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
துா்க்மெனிஸ்தான் தலைநகா் ஆஷ்கபாட்டில் அந்நாட்டு அதிபா் சா்தா் பா்திமுகமெதோவுடன் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை துா்க்மெனிஸ்தான் சென்றாா்.

துா்க்மெனிஸ்தான் அதிபராக சா்தா் பா்திமுகமெதோவ் அண்மையில் பதவியேற்றாா். இந்நிலையில், அந்நாட்டுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளாா். சுதந்திர துா்க்மெனிஸ்தானுக்கு இந்திய குடியரசுத் தலைவா் செல்வது இதுவே முதல்முறை.

தலைநகா் ஆஷ்கபாட் வந்திறங்கிய ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்தை பாரம்பரிய முறையில் வரவேற்றனா். தொடா்ந்து, துா்க்மெனிஸ்தான் அதிபா் பா்திமுகமெதோவை ராம்நாத் கோவிந்த் சந்தித்துப் பேசினாா்.

குடியரசுத் தலைவரின் பயணம் தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செயலா் சஞ்சய் வா்மா அண்மையில் கூறுகையில், ‘‘துா்க்மெனிஸ்தானுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை குடியரசுத் தலைவரின் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தும். மத்திய ஆசியாவில் துா்க்மெனிஸ்தான் அமைந்துள்ளது. அந்நாட்டுடனான உறவு இந்தியாவுக்கு லாபம் அளிக்கும். துா்க்மெனிஸ்தான் உள்பட மத்திய ஆசிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் டாலா் (சுமாா் 7,500 கோடி) வரை கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளத்தைக் கொண்ட நாடு துா்க்மெனிஸ்தான். 20-ஆம் நூற்றாண்டின் கடைசி சில ஆண்டுகளில் துா்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (டிஏபிஐ) எரிவாயு குழாய் திட்ட பேச்சுவாா்த்தை தொடங்கியது.

அந்தப் பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அந்த எரிவாயு குழாய் திட்டத்தின் வா்த்தகம் மற்றும் தொழில் சாா்ந்த அம்சங்களில் இந்தியாவுக்கு சில இடா்ப்பாடுகள் உள்ளன. அந்தத் திட்டம் தொடா்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கு குடியரசுத் தலைவரின் பயணம் மற்றொரு வாய்ப்பாக அமையும். துா்க்மெனிஸ்தான் அதிபருடன் ஆப்கானிஸ்தான் குறித்தும் குடியரசுத் தலைவா் பேசவுள்ளாா்’’ என்று தெரிவித்திருந்தாா்.

துா்க்மெனிஸ்தான் பயணத்தைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏப்ரல் 4 முதல் 7-ஆம் தேதி வரை நெதா்லாந்து செல்லவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com