சைத்ர நவராத்திரி: இமாச்சல் கோயில்களில் அலைமோதும் கூட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில் சைத்ர நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் இன்று காலை முதல் கூட்டம் அலைமோதுகிறது. 
சைத்ர நவராத்திரி: இமாச்சல் கோயில்களில் அலைமோதும் கூட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில் சைத்ர நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் இன்று காலை முதல் கூட்டம் அலைமோதுகிறது. 

கரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஒன்பது நாள் கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரி திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில்களில் குவிந்தனர். 

விழா சுமுகமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரஜேஸ்வரி தேவி ஆலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் எனக் கோயில் நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர். திருவிழாவின் கடைசி 2 நாட்களில் கோயில் நடை அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்படும். ஏப்ரல் 11-ம் தேதி ராம நவமியுடன் திருவிழா நிறைவடைகிறது. 

வட மாநிலங்களில் மிகவும் போற்றப்படும் ஆலயங்களில் ஒன்றான காங்க்ராவில் உள்ள பிரஜேஸ்வரி தேவி கோயிலுக்கு பஞ்சாப். ஹரியாணா. உத்தரகண்ட், தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.

மேலும், உனாவில் உள்ள சிந்த்பூர்ணி கோயில், ஹமிர்பூரில் உள்ள பாபா பாலக் நாத் கோயில், பிலாஸ்பூரில் உள்ள நைனா தேவி கோயில், காங்க்ராவில் உள்ள ஜ்வாலாஜி மற்றும் சாமுண்டா தேவி கோயில்கள் மற்றும் சிம்லாவில் உள்ள பீமகாளி மற்றும் ஹடேஸ்வரி கோயில்களில் நவராத்திரி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com