ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் ஏன் எண்ணெய் வாங்கக் கூடாது? நிர்மலா சீதாராமன்

ரஷியாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் வாங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்


இந்தியாவின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டே, ரஷியாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் வாங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நமது நாட்டின் நலனை நமக்கு முக்கியம் என்று கூறியிருக்கும் நிர்மலா சீதாராமன், நமது எரிபொருள் பாதுகாப்பே நமக்கு அனைத்தையும் விட முக்கியம். சலுகை விலையில் எரிபொருள் கிடைக்கும் போது, ஏன் அதனை நாம் வாங்கக் கூடாது? என்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் கேள்வி எழுப்பினார்.

நாம் ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்க ஆரம்பித்துவிட்டோம். ஒரு சில பேரல்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 - 4 நாள்களில் விநியோகம் தொடங்கும், பிறகு இது தொடரும். இந்த முடிவு, இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டுதான் எடுக்கப்பட்டுள்ளது என்று, உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்குவது தொடர்பான விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com