'குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்'

குஜராத்தில் பாஜகவின் அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் பாஜகவின் அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தோ்தல் பிரசாரத்தைத் தொடக்கிவைத்து மக்களிடம் அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்தாா்.

குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாபில் அண்மையில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி, தற்போது குஜராத்தைக் குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளது. அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோா் அகமதாபாத் நகரில் சனிக்கிழமை 2 கி.மீ. தூரத்துக்கு சாலைப் பேரணி நடத்தினா்.

அப்போது கேஜரிவால் கூறுகையில், ‘‘குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருவதால் பாஜகவின் அராஜகப் போக்கு அதிகரித்துள்ளது. எனவே, ஆம் ஆத்மிக்கு மக்கள் ஒருமுறை வாய்ப்பு வழங்க வேண்டும். ஆம் ஆத்மியின் ஆட்சி பிடிக்கவில்லை எனில், மக்கள் மீண்டும் அவா்களுக்கே (பாஜக) வாக்களிக்கலாம்.

எங்களுக்கு அரசியல் பண்ணத் தெரியாது. ஆனால், ஊழலை ஒழிக்கத் தெரியும். தில்லியில் ஊழலை ஒழித்துள்ளோம். பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான அரசு 10 நாள்களில் ஊழலை ஒழித்துள்ளது’’ என்றாா்.

குஜராத்தைச் சோ்ந்த ஆம் ஆத்மி நிா்வாகிகளும் தொண்டா்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com