எரிபொருள் வரி செலுத்திய மக்களுக்கு ஈடாக என்ன கிடைத்தது? - ப.சிதம்பரம் கேள்வி

ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். 
எரிபொருள் வரி செலுத்திய மக்களுக்கு ஈடாக என்ன கிடைத்தது? - ப.சிதம்பரம் கேள்வி

ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். 

உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் பிறகு, ஐந்து மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தேர்தல் முடிவுக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கியது. 

அதாவது கடந்த 137 நாள்களுக்கு பின்னர் தற்போது பெட்ரோல், டீசல் விலையில் நாள்தோறும் 76 காசுகள் உயர்த்தப்பட்டு வருகிறது. அதேபோன்று வீட்டு உபயோகம், வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. விமானங்கள் பயன்பாட்டுக்கான எரிபொருள் விலையும் 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனுது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருப்பதாவது:  8 ஆண்டுகளில் எரிபொருள் வரியாக ரூ.26,51,919 கோடி வசூலித்துள்ள மோடி அரசு, வரி செலுத்தியுள்ள மக்களுக்கு ஈடாக என்ன செய்தது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளங்கள். 

நாட்டில் தோராயமாக 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் எரிபொருள் வரி வசூல் செய்யப்படுகிறது.  அதாவது ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் மத்திய அரசு சராசரியாக ரூ.1 லட்சத்தை எரிபொருள் வரியாக மத்திய அரசு வசூலித்துள்ளது.

ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். 

மேலும் வரி, நலன் மற்றும் வெற்றி பெறுவதற்கு வாக்குகளை பெறுவதற்கான யுத்தியைக் கண்டுபிடித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் புத்திசாலித்தனத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com