
கோப்புப்படம்
தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இரு அவைகளிலும் இன்று காலை அலுவல்கள் தொடங்கிய நிலையில், மக்களவையில் தமிழக ஆளுநரை திரும்பப் பெறுவது குறித்து பேச திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர். பாலு அனுமதி கோரினார்.
படிக்க | பெட்ரோல் விலை உயர்வு: மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி
ஆனால், அவைத் தலைவர் அனுமதி மறுத்த நிலையில், அதனைக் கண்டித்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின், மக்களவைக்கு வந்த திமுக எம்.பி.க்கள், ‘தமிழக ஆளுநரை வாபஸ் வாங்கு’ எனத் தமிழல் முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் மக்களவையைவிட்டு திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.