பீர்பூம் வன்முறையில் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு அரசுப் பணி: மம்தா

மேற்கு வங்கம், பீர்பூமில் நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு இன்று அரசுப் பணி வழங்கியதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி.
கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி.

மேற்கு வங்கம், பீர்பூமில் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு இன்று அரசுப் பணி வழங்கியதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பீர்பூமில் நடைபெற்ற வன்முறையில் 8 பேர் உடல் கருகி பலியாகினர். சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த முதல்வர் மம்தா ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு குரூப் டி பிரிவில் அரசு வேலை அளித்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பீா்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுயி கிராமத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸின் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கடந்த மாதம் 21-ஆம் தேதி கொல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 2 சிறாா்கள், 3 பெண்கள் உள்பட 8 போ் உடல் கருகி உயிரிழந்தனா்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கொல்கத்தா உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com