கரோனா இல்லாத மாநிலமாக மாறிய புதுச்சேரி

தொடர்ந்து ஐந்தாவது நாளாக கரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது என்று மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தொடர்ந்து ஐந்தாவது நாளாக கரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது என்று மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக ஜி.ஸ்ரீராமுலு வெளியிட்ட அறிக்கையில், 

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பதிவாகவில்லை. மேலும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் புதிதாக இறப்பும் பதிவாகவில்லை. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 12 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஆனால் புதிதாக தொற்று பதிவாகவில்லை. தொடர்ந்து 5வது நாளாக கரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது. 

இதையடுத்து யூனியன் பிரதேசத்தில் மொத்த பாதிப்பு 1,65,774 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,962 ஆகவும் எண்ணிக்கை மாறாமல் உள்ளது.  நாட்டில் இதுவரை 16,46,267 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் தற்போது கரோனா இல்லாத போதிலும், மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைக்கக்கூடாது என்பதால் முகக்கவசம் அணிதல், சமூக விலகல் மற்றும் கைகளை கழுவுதல் ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com