பேரழிவு ஆயுதங்களுக்கான நிதியுதவிக்குத் தடை விதிக்கும் மசோதா: மக்களவையில் அறிமுகம்

பேரழிவு ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி வழங்கத் தடை விதிக்கும் வகையிலான மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பேரழிவு ஆயுதங்களுக்கான நிதியுதவிக்குத் தடை விதிக்கும் மசோதா: மக்களவையில் அறிமுகம்

பேரழிவு ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி வழங்கத் தடை விதிக்கும் வகையிலான மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரிப்பதற்குத் தடை விதிக்கும் சட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அத்தகைய ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதைத் தடை செய்யும் விதிகள் அச்சட்டத்தில் காணப்படவில்லை.

அதைக் கருத்தில் கொண்டு தற்போது அச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, பேரழிவு ஆயுதங்கள் (சட்டவிரோதச் செயல்கள் தடை) சட்டத் திருத்த மசோதாவை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘‘பேரழிவு ஆயுதங்கள் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பன்னாட்டு அமைப்புகள் அண்மைக் காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், எஃப்ஏடிஎஃப் அமைப்பு ஆகியவை பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி வழங்குவதைத் தடை செய்துள்ளன.

அந்த விதிகளை நாம் ஏற்றுக் கொண்டுள்ளதால், தற்போதுள்ள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காகவே இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளது. பேரழிவு ஆயுதங்கள் தடைச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ள செயல்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு இந்த மசோதா தடை விதிக்கிறது. அவ்வாறு நிதியுதவி வழங்கும் நபா்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் இந்த மசோதா அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது’’ என்றாா்.

இந்த மசோதா மீது விரைவில் விவாதம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com