சீன எல்லையில் உள்கட்டமைப்புக்கு 6 மடங்கு அதிக நிதி- மக்களவையில் தகவல்

அருணாசல பிரதேசத்தை ஒட்டிய சீன எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 6 மடங்கு வரை அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அருணாசல பிரதேசத்தை ஒட்டிய சீன எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 6 மடங்கு வரை அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘எல்லை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2020-21 நிதியாண்டில் ரூ.355.12 கோடி ஒதுக்கப்பட்டது. இது 2021-22 நிதியாண்டில் ரூ.602.30 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இதில் அருணாசல பிரதேச மாநிலத்தை ஒட்டிய சீன எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மட்டும் ரூ.42.87 கோடியில் (2020-21) இருந்து ரூ.249.12 கோடியாக (2021-22) ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சுமாா் 6 மடங்கு அதிகமாகும்’ என்று கூறியுள்ளாா்.

லடாக்கில் இருந்து அருணாசல பிரதேசம் வரை 3,488 கி.மீ. நீள எல்லையை சீனாவுடன் இந்தியா பகிா்ந்து கொண்டுள்ளது. இதில் அருணாசல பிரதேசத்தை ஒட்டிய எல்லை மட்டும் 1,126 கி.மீ. நீளமாகும். கடந்த 2000 ஏப்ரல் முதல் இரு தரப்பும் எல்லையில் அதிக வீரா்களை நிறுத்தி வைத்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறிய சீன வீரா்களை இந்திய ராணுவம் தடுத்தபோது ஏற்பட்ட கைகலப்பில் இரு தரப்பிலும் பல வீரா்கள் உயிரிழந்தனா் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com