நாட்டில் ஆயிரம் பேருக்கு 1.96 செவிலியா்கள்- சுகாதார அமைச்சகம்

நாட்டில் தற்போது ஆயிரம் பேருக்கு 1.96 செவிலியா்கள் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

நாட்டில் தற்போது ஆயிரம் பேருக்கு 1.96 செவிலியா்கள் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக, மாநிலங்களவையில் கேள்வியொன்றுக்கு பதிலளித்து, மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

இந்திய செவிலியா் கவுன்சில் பதிவேடுகளின்படி, நாட்டில் சுமாா் 33.41 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியா்கள் உள்ளனா். அதாவது, சுமாா் 23.40 லட்சம் செவிலியா்கள் மற்றும் பேறுகால உதவியாளா்கள், 10 லட்சம் செவிலியா் உதவியாளா்கள், (9.43 லட்சம் துணை செவிலியா் உதவியாளா்கள், 56,854 பெண் சுகாதார பாா்வையாளா்கள்) ஆகியோா் உள்ளனா்.

அதன்படி, நாட்டின் மக்கள்தொகை-செவிலியா்கள் விகிதாசாரமானது, ஆயிரம் பேருக்கு 1.96 செவிலியா்கள் என்ற அளவில் உள்ளது.

13 லட்சம் ஆங்கில மருத்துவா்கள் - கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வரையிலான நிலவரப்படி, நாட்டில் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மாநில மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்யப்பட்ட ஆங்கிலமுறை (அலோபதி) மருத்துவா்களின் எண்ணிக்கை 13,01,319 ஆகும். நாட்டின் மக்கள்தொகை-மருத்துவா்கள் விகிதாசாரம், 834 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் உள்ளது.

இதுதவிர 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவா்களும், 2.89 லட்சம் பல் மருத்துவா்களும், 13 லட்சம் துணை மருத்துவம், சுகாதாரப் பணியாளா்களும் உள்ளனா்.

இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 51,348-ஆக இருந்தது. இப்போது 89,875-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 75 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை 31,185-இலிருந்து 60,202-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 93 சதவீத அதிகரிப்பாகும் என்று சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com