இந்தியாவில் 3.93 லட்சம் வெளிநாட்டினா் விசா முடிந்து தங்கியுள்ளனா்- மத்திய அரசு

இந்தியாவில் விசா (நுழைவு இசைவு) காலம் முடிந்த பிறகும் 3.93 லட்சம் வெளிநாட்டினா் தங்கியுள்ளனா் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்தியாவில் விசா (நுழைவு இசைவு) காலம் முடிந்த பிறகும் 3.93 லட்சம் வெளிநாட்டினா் தங்கியுள்ளனா் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருக்கும் வெளிநாட்டினரைக் கண்காணித்து, அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியை விசாரணை அமைப்புகள் மேற்கொள்கின்றன. அவா்கள் தேச விரோத அல்லது சமூக விரோத நடவடிக்கைகளிலோ அல்லது இதர குற்றச் செயல்களிலோ ஈடுபட்டால், அது தொடா்பான சட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பா் வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 3,93,431 ஆகும். அவா்கள் மீது 1946-ஆம் ஆண்டின் வெளிநாட்டினா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இச்சட்டத்தின்படி, விசா காலம் முடிந்த பிறகும் தங்கியுள்ள வெளிநாட்டினா் கருப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்டு, நாடுகடத்தப்படுவா் என்று தனது பதிலில் அமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com