உ.பி.யில் வினாத்தாள் கசிவு: பள்ளி முதல்வர் உள்பட 51 பேர் கைது

உத்தரப் பிரதேசத்தில் 12-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தனியார் பள்ளி முதல்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

உத்தரப் பிரதேசத்தில் 12-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தனியார் பள்ளி முதல்வர் இன்று கைது செய்யப்பட்டார். 

கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த 12-ம் வகுப்பு ஆங்கில தேர்வின் வினாத்தாள் வெளியானதால், 24 மாவட்டங்களில் நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து ராஸ்ராவின் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவ்நாராயண் வைஷ்யா கூறுகையில், 

12-ம் வகுப்பு வினாத்தாள் கசிவு தொடர்பாக உபான் காவல்நிலையத்தில் கடந்த ஞாயிறன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தனியார் பள்ளியின் முதல்வர் அக்ஷய் லால் யாதவ் இன்று போலீசாரால் கைது செய்யபபட்டுள்ளார். 

இந்த வழக்கு தொடர்பாக முன்னதாக, பள்ளிகளின்  மாவட்ட ஆய்வாளர் பிரஜேஷ் குமார் மிஸ்ரா, தனியார் கல்லூரியின் மேலாளர்கள், முதல்வர்கள் மற்றும் 3 எழுத்தாளர்கள் உள்பட 51 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

பல்லியாவில் கசிந்த வினாத்தாள் நகல் ஒவ்வொன்றும் ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com