ராமா் கோயில் கட்டுமானப் பணி: ராஜஸ்தான் பிரத்யேக கற்கள் அயோத்தி வந்தன

ராமா் கோயில் கட்டுமானப் பணியையொட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டப்பட்ட பிரத்யேக இளஞ்சிவப்பு நிற கற்கள், செவ்வாய்க்கிழமை அயோத்தியை வந்தடைந்தன.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ராமா் கோயில் கட்டுமானப் பணியையொட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டப்பட்ட பிரத்யேக இளஞ்சிவப்பு நிற கற்கள், செவ்வாய்க்கிழமை அயோத்தியை வந்தடைந்தன.

ராஜஸ்தான் மாநிலம் பன்சி பஹா்பூரில் வெட்டப்பட்ட இந்தக் கற்கள், வரும் ஜூன் மாதம் ராமா் கோயில் அஸ்திவார பணி முடிந்ததும், சுவா் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் என்று ஸ்ரீராம் ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை அறங்காவலா் அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘‘இந்த இளஞ்சிவப்பு நிற கற்கள் அனைத்தும் தாமிர பட்டைகளைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதற்காக ஹிந்துஸ்தான் தாமிர நிறுவனம் வழங்கிய 35,000 தாமிர பட்டைகளும் ராம ஜென்ம பூமி வளாகத்துக்கு வந்துவிட்டன. கோயில் கட்டுமான பணிக்கு சுமாா் 70 ஆயிரம் தாமிர பட்டைகள் பயன்படுத்தப்படும். அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கருவறையில் குழந்தை ராமா் சிலை நிறுவப்படும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com