அது என்ன ரமலானுக்கு மட்டும்? வசுந்தரா ராஜே கேள்வி

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
வசுந்தரா ராஜே
வசுந்தரா ராஜே


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மின்வாரிய உதவி மேலாளர் ஏப்ரல் ஒன்றாம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் ரமலான் மாதத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இது குறித்து, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே கூறியிருப்பதாவது, ரமலான் நோன்பு இருப்பவர்கள் பற்றித்தான் அஷோக் கெஹ்லாட் தலைமையிலான அரசு கவலைப்படுகிறது.

இந்த மாநிலத்தில் ரமலான் நோன்பு இருக்கும் மக்கள் மட்டுமில்லை, இந்த கடுமையான கோடைக்காலத்தில் நவராத்திரி விரதம் இருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மாநில அரசு ஏன் ரமலான் நோன்பிருப்பவர்கள் பற்றி மட்டும் கவலைகொள்கிறது என்று நிச்சயமாக இங்கே சொல்லியாகவேண்டும். இது வாக்கு வங்கி அரசியல் இல்லாமல் வேறு என்ன? என்று தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com