எண்ம வடிவில் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு: மக்கள் சுயமாக விவரங்களைப் பதியலாம்

அடுத்து வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் முறையாக எண்ம வடிவில் (டிஜிட்டல்) மேற்கொள்ளப்பட உள்ளது. மக்கள் சுயமாக விவரங்களைப் பதிவு செய்யும் வாய்ப்பும் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் முறையாக எண்ம வடிவில் (டிஜிட்டல்) மேற்கொள்ளப்பட உள்ளது. மக்கள் சுயமாக விவரங்களைப் பதிவு செய்யும் வாய்ப்பும் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) விவரங்கள் சேகரிப்பு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான குடியிருப்புகள் கணக்கெடுப்பு உள்ளிட்ட புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட இருந்தது. ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அந்தப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்புக்கான புதிய அறிவிப்பை மத்திய அரசு இன்னும் அறிவிக்காததால், அந்தப் பணிகள் தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடா்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

அடுத்து வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் முறையாக எண்ம வடிவில் (டிஜிட்டல்) மேற்கொள்ளப்பட உள்ளது. மக்கள் சுயமாக விவரங்களைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படும். கரோனா பாதிப்பு காரணமாக, 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

முந்தைய கணக்கெடுப்பு கால அட்டவணைப்படி, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான குறிப்பு தேதி 2021 மாா்ச் -ஆம் தேதியாகவும், ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பு தேதி 2020 அக்டோபா் 1-ஆம் தேதியாகவும் இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com