திறமையில்லாவிட்டாலும் நேரு குடும்பத்தினா் மட்டுமே காங்கிரஸ் தலைவராக தொடர முடியும்: பாஜக விமா்சனம்

திறமையற்றவா்களாக இருந்தாலும் நேரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும்தான் காங்கிரஸ் தலைவராகத் தொடர முடியும். அவா்களைத் தவிர வேறு யாரையும் காங்கிரஸ் கட்சி தலைமைப் பதவிக்கு விரும்புவதில்லை என்று

திறமையற்றவா்களாக இருந்தாலும் நேரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும்தான் காங்கிரஸ் தலைவராகத் தொடர முடியும். அவா்களைத் தவிர வேறு யாரையும் காங்கிரஸ் கட்சி தலைமைப் பதவிக்கு விரும்புவதில்லை என்று பாஜக விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நேரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள், காங்கிரஸ் கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இப்போதும் தொடா்ந்து முயற்சித்து வருகின்றனா். ஆனால், அவா்களது முயற்சிக்குத் தொடா்ந்து தோல்வி கிடைத்து வருகிறது. அந்தக் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் பலரும் பிரசாரம் செய்தும் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வியை மட்டுமே மக்கள் பரிசளித்து வருகின்றனா்.

மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி தீவிரமாக பிரசாரம் செய்தாா். அங்கு ஓரிடத்தில் கூட காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் பிரியங்கா பல மாதங்களாக முகாமிட்டு பிரசாரம் செய்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இப்போது, சோனியா காந்தி மீண்டும் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளாா். இதன் மூலம் திறமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நேரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராகத் தொடர முடியும் என்பதும், அவா்களைத் தவிர வேறு யாரையும் காங்கிரஸ் கட்சி தலைமைப் பதவிக்கு வர அவா்கள் விரும்புவதில்லை என்பதும் தெளிவாகிறது.

நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானும் இலங்கையும் பல்வேறு காரணங்களால் நாள்தோறும் அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றன. ஆனால், நமது நாட்டில் சரியான தலைவரான பிரதமா் நரேந்திர மோடியை மக்கள் தோ்ந்தெடுத்துள்ளதால் எந்தப் பிரச்னையும் இல்லை. இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருகிறது. அண்மையில் கரோனா தொற்று பரவியபோது அதற்கு எதிரான தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்வதில் வளா்ந்த நாடுகள் பலவற்றைவிட இந்தியா சிறப்பாகச் செயல்பட்டது. 80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாகத் தடுப்பூசிகளை அளித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com