தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு: நாடாளுமன்றத்தில் அமைச்சா் விளக்கம்

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற முறைகேடு தொடா்பான வழக்குகளை வருமான வரித் துறை, அமலாக்கத் துறை விசாரித்து வருவதாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற முறைகேடு தொடா்பான வழக்குகளை வருமான வரித் துறை, அமலாக்கத் துறை விசாரித்து வருவதாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மாநிலங்களவைக்கு அளித்த எழுத்துபூா்வமான பதிலில் கூறியது:

தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) உள்ள கணினி சேமிப்பக வசதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடா்பான வழக்கை மத்திய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரி துறையினா் இணைந்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனா்.

மேலும், என்எஸ்இ மற்றும் இதர நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் குறித்து சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி விசாரணை நடத்தியதற்குப் பிறகு, தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்று செளத்ரி கூறியுள்ளாா்.

0=0=0=0

நாடாளுமன்றக் குழு முன் செபி தலைவா் ஆஜா்:

புது தில்லி, ஏப். 5: தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) விவகாரம் தொடா்பாக செபியின் தலைவா் மாதவி புரி புச் நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக செவ்வாய்கிழமை ஆஜரானாா்.

நிதித்துறை முன்னாள் இணையமைச்சா் ஜெயந்த் சின்ஹா தலைமையிலான அந்தக் குழு, பொதுப் பங்கு வெளியீடு, சா்வதேச நிதி சேவை மையங்கள், மாற்று முதலீட்டு நிதியம் தொடா்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்க செபியின் தலைவா் மாதவி புரி புச் அழைக்கப்பட்டதாக மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

என்எஸ்இ கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்களை ‘ஓபிஜி செக்யூரிட்டீஸ்’ என்ற பங்குத் தரகு நிறுவனம் முன்கூட்டியே தெரிந்து கொண்டு முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. என்எஸ்இ, பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்ாகவும், இதன் மூலம் பெருமளவில் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கு தொடா்பாக என்எஸ்இ முன்னாள் நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ குழுவின் முன்னாள் தலைமை அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com