முற்றுகிறது மோதல்: இதனால்தான் மோடியை சந்தித்தாரா தமிழிசை? 

புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், திடீரென நேற்று புது தில்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
முற்றுகிறது மோதல்: இதனால்தான் மோடியை சந்தித்தாரா தமிழிசை? 
முற்றுகிறது மோதல்: இதனால்தான் மோடியை சந்தித்தாரா தமிழிசை? 

புது தில்லி; புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், திடீரென நேற்று புது தில்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படத்துடன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழிசையின் புது தில்லி பயணம் குறித்து தற்போது பலவாறு செய்திகள் வெளியாகி வருகின்றன.

தெலங்கானா முதல்வருக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல்போக்கு குறித்து புகார் அல்லது விளக்கம் அளிக்கவே இந்த பயணம் அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தெலங்கான அரசுக்கும், ஆளுநர் தமிழிசைக்கும் நெடுநாள்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தெலங்கான சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் 7ஆம் தேதி தொடங்கியது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன்தான் தொடங்கும். அந்த உரையை தெலங்கானா அரசுதான் தயாரிக்கும். ஆனால், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா அரசு, ஆளுநர் உரைக்கு அழைப்பு விடுக்காமல், ஆளுநர் உரையே இல்லாமல் பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்டியது.

கடந்த சில மாதங்களாகவே தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும் தெலங்கானாவின் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு  இருந்த நிலையில், இந்த பட்ஜெட் உரையில் ஆளுநர் புறக்கணிப்பு கடும் மோதலை உருவாக்கியது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநர் பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும், தெலங்கானா பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை புறக்கணிக்கப்பட்டது குறித்து தமிழிசை பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, இது வெளிப்படையாகவே நடக்கிறது. ஊடகத்தினர் மட்டுமல்லாமல் அனைவருக்குமே தெரியும். இதுபற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை என்று பதிலளித்தார்.

தெலங்கான அரசு தன்னை அவமதிப்பது குறித்து நான் எந்த வருத்தமும் அடையவில்லை, மாறாக, ஒரு மாநில அரசு, தன்னை எப்படி நடத்துகிறது என்பதை அந்த மாநில மக்களே அறிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறேன் என்றார்.

பனிப்போரின் பட்டியல்..

  • பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநரை உரை இடம்பெறவில்லை.
     
  • தெலங்கானாவில் நடைபெற்ற சம்மக்கா - சரளம்மா ஜாத்திரைக்கு, ஆளுநருக்கு அரசு சார்பில் ஹெலிகாப்டர் வழங்கப்படவில்லை.
     
  • ராஜ்பவனில் நடைபெற்ற உகாதி விழாவை முதல்வர், அமைச்சர்கள் டிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் புறக்கணித்துவிட்டனர்.
     
  • பிரகதி பவனில் நடைபெற்ற உகாதி விழாவுக்கு ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
     
  • இதுபோல அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு பல ரூபங்களில் விஸ்வரூபம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com