தில்லியில்  ஏடிஎம் கொள்ளையர்கள் 3 பேர் கைது

பல ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த மேவாட்டி கும்பலைச் சுற்றி வளைத்து,  அந்த கும்பலைச் சேர்ந்த மூவரைக் கைது
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி: பல ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த மேவாட்டி கும்பலைச் சுற்றி வளைத்து,  அந்த கும்பலைச் சேர்ந்த மூவரைக் கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை  சிறப்புப் பிரிவினர்  வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இந்த கும்பல் இதற்கு முன்னர் ஹரியானாவின் மேவாட்டில் உள்ள  ஏடிஎம்மில் உள்ள பணத்தை திருடிய சென்ற பிறகு,  அந்தப் பணத்தை கிணற்றில் கொட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இம்ரான் என்ற இம்மா, சல்மான் மற்றும் ஷகீல் என   3 பேர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். சிறப்புப் பிரிவின் துணை காவல்துறை ஆணையர் (டிசிபி) ஜஸ்மித் சிங் கூறுகையில், இம்ரான் என்பவர் கும்பலின் தலைவர். கொலை, மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை மற்றும் பிற வழக்குகளிலும் தேடப்பட்டு வந்தவர் என்று கூறினார்.

"இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தில்லி-என்சிஆர் மற்றும் அண்டை மாநிலங்களில் ஏடிஎம்களை உடைத்து பணத்தை எடுத்துச் செல்வது மற்றும் பிற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது" என்று சிங் கூறினார்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 8 லட்ச ரூபாய்க்கு வாங்கிய கிரெட்டா காரை காவல்துறையினர் மீட்டனர். அவர்களைப் பிடிக்க ஏசிபி அட்டர் சிங் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வர் சிங் மற்றும் சிவக்குமார் ஆகியோர் அடங்கிய குழு செயல்பட்டு வருவதாக  சிங் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com