முத்தமிட, கட்டியணைக்க தடை.. எங்கே? ஏன்? என்று பாருங்கள்

சீனாவின் வா்த்தக தலைநகரான ஷாங்காயில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தம்பதிகள் ஒன்றாக உறங்க, முத்தமிட, கட்டியணைக்க, ஒன்றாக அமர்ந்து உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முத்தமிட, கட்டியணைக்க தடை.. எங்கே? ஏன்? என்று பாருங்கள்
முத்தமிட, கட்டியணைக்க தடை.. எங்கே? ஏன்? என்று பாருங்கள்

சீனாவின் வா்த்தக தலைநகரான ஷாங்காயில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தம்பதிகள் ஒன்றாக உறங்க, முத்தமிட, கட்டியணைக்க, ஒன்றாக அமர்ந்து உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் நகரில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஒலிப்பெருக்கி மூலம் இது குறித்த அறிவிப்பை தெருக்கள்தோறும் அறிவுறுத்தி வருகிறார்கள். அதில், இன்று இரவு தம்பதிகள் தனித்தனியாக படுத்துறங்குங்கள், முத்தமிடாதீர்கள், கட்டியணைக்க அனுமதியில்லை, தனித்தனியாகவே உணவருந்துங்கள். உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி என்று அறிவிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த விடியோவில் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இதுபோல, வீட்டின் ஜன்னல்களைத் திறக்கவும், பாடல்களைப் பாடவும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு டிரோன்கள் மூலம் ஷாங்காய் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றின் பிஏ.2 என்ற உருமாறிய தீநுண்மி பரவல் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் பெரும்பாலான பாதிப்பு ஷாங்காயில் பதிவாகி வருகிறது. 

2.5 கோடி மக்கள்தொகை கொண்ட ஷாங்காய் நகரில் ஏற்கெனவே பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் முகாம்கள் அதிகளவில் நடத்தப்பட்டன. கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, லேசான அறிகுறி உள்ளவா்கள் அல்லது அறிகுறி இல்லாதவா்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டனா்.

இந்நிலையில், ஷாங்காய் நகரில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 2,000 ராணுவ மருத்துவப் பணியாளா்கள் உள்பட 10,000 சுகாதாரப் பணியாளா்கள் அனுப்பப்பட்டுள்ளனா். சுமாா் 4 மாகாணங்களிலிருந்து மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் அனுப்பப்பட்டுள்ளதாக சீன அரசின் நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஷாங்காய் நகரில் பெரும்பாலான கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற கடுமையான தடை விதிக்கப்பட்டு, படிப்படியாக தடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு ஏராளமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com