யோகா நாள் கவுன்டவுன் தொடக்கம்: தில்லி செங்கோட்டை நிகழ்ச்சியில் 2, 500 பேர் பங்கேற்பு

ஜூன் 21 ஆம் தேதி யோகா நாளையொட்டி, தில்லி செங்கோட்டையில் 75 நாள்கள் 'யோகா உத்சவ்' நிகழ்ச்சி இன்று தொடங்கியது. 
யோகா நாள் கவுன்டவுன் தொடக்கம்: தில்லி செங்கோட்டை நிகழ்ச்சியில் 2, 500 பேர் பங்கேற்பு

ஜூன் 21 ஆம் தேதி யோகா நாளையொட்டி, தில்லி செங்கோட்டையில் 75 நாள்கள் 'யோகா உத்சவ்' நிகழ்ச்சியின் கவுன்டவுன் இன்று தொடங்கியது. 

நாட்டில் யோகா தினம் 2015 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆயுஷ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'யோகா உத்சவ்' கொண்டாட்டத்துக்கான கவுன்டவுன் இன்று தொடங்கியது. தில்லி செங்கோட்டையில் உள்ள பூங்காவில் இன்று காலை நடந்த இந்நிகழ்வில் சுமார் 2,500 பேர் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, யோகா என்பது மூதாதையர்களின் வாழ்க்கை முறை என்றும், யோகா செய்வதால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி, யோகா என்பது பூஜ்ஜிய பிரீமியத்துடன் கூடிய காப்பீடு என்றும் அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு நாட்டுத் தூதர்கள், யோகா குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com