தாணேவில் காணாமல் போன 10 வயது சிறுவன் குஜராத்தில் மீட்பு

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் காணாமல் போன 10 வயது சிறுவன் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
தாணேவில் காணாமல் போன 10 வயது சிறுவன் குஜராத்தில் மீட்பு

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் காணாமல் போன 10 வயது சிறுவன் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து மேலும் கூறியதாவது, 

கடந்த மாதம் கலுபூர் ரயில் நிலையத்தில் தனியாக நின்றுகொண்டிருந்த சிறுவன், குஜராத்தின் காந்தி நகரில் உள்ள ரிமாண்ட் ஹோமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். 

மார்ச் 30 அன்று ரிமாண்ட் ஹோம் நிர்வாகம் தாணே நகர காவல்துறையின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்குத் தகவல் கொடுத்தது. அவர் தாணே மாவட்டம் பிவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறி சிறுவனின் முகவரியை வழங்கியது. 

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினர், சிறுவனின் பெற்றோரைக் கண்டறிந்து, சிறுவன் அவர்களுடையதுதானா என அடையாளம் காணப்பட்டது. அதன்பின்னர் சிறுவனை அவனது குடும்பத்தாரிடம் காவல்துறையினர் சேர்ந்தனர். 

சிறுவனின் பெற்றோர்கள் கூலித்தொழிலாளர்கள், அவர்களுக்கு புகார் அளிக்கும் நடைமுறை தெரியாததால் சிறுவனை இழந்து தவிர்த்ததாக அந்த அதிகாரி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com