ஜெய்ப்பூரில் நாளை நீர்சக்தி துறை சார்பில் மண்டல மாநாடு

2022-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ஜெய்ப்பூரில் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் மண்டல மாநாடு மத்திய நீர்சக்தி துறை அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.
நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

புது தில்லி: 2022-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ஜெய்ப்பூரில் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் மண்டல மாநாடு மத்திய நீர்சக்தி துறை அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.

ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் – கிராமின் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான வழி வகைகளை மதிப்பாய்வு செய்வதற்காக 8 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் மண்டல மாநாடு மத்திய நீர்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடைபெறுகிறது. 

கோவா, குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தராகண்ட், ஜம்மு - காஷ்மீர், லடாக், டாமன் - டையூ, தாதர் மற்றும் நாகர் - ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்து கொள்கின்றன. 

இம்மாநாட்டில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 10 அமைச்சர்கள் மற்றும் கிராமப்புற குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறையின் மூத்த அதிகாரிகளும் நேரில் பங்கேற்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com