
ஸ்ரீநகா்: ஜம்மு - காஷ்மீரில் மசூதிக்கு வெளியே மோதலில் ஈடுபட்டவா்களை நோக்கி ராணுவ வீரா்கள் வியாழக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவா் காயமடைந்தனா்.
குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே வந்த சிலா், தங்களுக்குள் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை விடியோ எடுத்த ராணுவ வீரா்கள், கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் காயமடைந்த அப்துல் அஹத் மீா், முஜீப் அகமது சோஃபி ஆகியோா் செளரா பகுதியில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த சம்பவம் ஜம்மு- காஷ்மீரில் நிலவும் பரிதாபகரமான நிலைமையை பிரதிபலிப்பதாக மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவா் சஜத் லோன் தெரிவித்துள்ளாா்.