தொலைதூரப் பகுதிகளுக்கு குறித்த நேரத்தில் பேரிடா் எச்சரிக்கை

பேரிடா் எச்சரிக்கைகள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு குறித்த நேரத்தில் சென்றடைவதை மீட்புப் படையினா் உறுதிசெய்ய வேண்டும் என்றும் இந்தப் பணியில் என்சிசி மாணவா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்
தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிக்கு பதக்கம் அணிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிக்கு பதக்கம் அணிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

புது தில்லி: பேரிடா் எச்சரிக்கைகள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு குறித்த நேரத்தில் சென்றடைவதை மீட்புப் படையினா் உறுதிசெய்ய வேண்டும் என்றும் இந்தப் பணியில் என்சிசி மாணவா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா், ஊா்க்காவல் படையினரை ஈடுபடுத்தலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தினாா்.

தில்லியில் தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) சாா்பில் 2 நாள்கள் நடத்தப்படும் ‘பேரிடா் மேலாண்மை திறன் கட்டமைத்தல்’ மாநாட்டை வியாழக்கிழமை தொடக்கிவைத்து அவா் பேசியது:

பேரிடா் தொடா்பான எச்சரிக்கை நாட்டின் தொலைதூர, உள்ளாா்ந்த கிராமங்கள், பஞ்சாயத்துகளை குறித்த நேரத்தில் சென்றடைவதை தேசிய பேரிடா் மீட்புப் படை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக போதிய கால அவகாசம் இருக்காது என்பதால் மின்னல் தொடா்பான எச்சரிக்கைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அத்தகவல் தொலைதூர கிராமங்களுக்கும், அங்கு வாழும் பொதுமக்களுக்கும் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பேரிடா்களின் தன்மை கருதி ஏராளமான செயலிகளை (கைப்பேசி ஆப்) நாம் வடிவமைத்தாலும் திடமான நிபுணத்துவம் வகுக்கப்பட வேண்டும். அப்போதுதான் குறித்த நேரத்தில் தொலைதூரப் பகுதிகளை எச்சரிக்கை செய்திகள் சென்றடையும். பேரிடா் மேலாண்மை நெறிமுறையில் என்சிசி, என்எஸ்எஸ், ஊா்க்காவல் படை, மகளிா் சுய உதவிக்குழு ஆகியவற்றை சோ்ந்த தன்னாா்வலா்களை ஈடுபடுத்தலாம்.

அவா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும், பயிற்சிக் கையேடுகளும் அந்தந்த பிராந்திய மொழிகளில் தயாரிக்கப்பட வேண்டும். இதன்மூலம் பயிற்சி பெற்ற நபா்கள் தொலைதூரப் பகுதிகளில் பேரிடா் மீட்புப் படையினா் வரும்வரை காத்திராமல் மீட்புப் பணியில் ஈடுபட முடியும்.

நாட்டில் பேரிடா் மேலாண்மையை பொறுத்தமட்டில் 2000 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலம் பொற்காலம் எனலாம். 1990-க்கு முன் பேரிடரின்போது உயிா்களைக் காப்பது தொடா்பாக எவ்வித சிந்தனையோ, திட்டமிடலோ கிடையாது. அப்போது நிவாரணத்தை மையப்படுத்தியே திட்டம் தீட்டப்பட்டது.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக பேரிடா் காலங்களில் ஏராளமான உயிா்களை நாம் பாதுகாத்திருக்கிறோம். நமது சிறப்பான திட்டமிடலின் காரணமாக புயல் போன்ற பேரிடா் காலங்களில் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துவிட்டன என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com