வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசா்வ் வங்கி

 ரிசா்வ் வங்கி தொடா்ந்து 11 முறையாக வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாமல் பழைய நிலையிலேயே தொடரும் என தெரிவித்துள்ளது.
வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசா்வ் வங்கி

 ரிசா்வ் வங்கி தொடா்ந்து 11 முறையாக வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாமல் பழைய நிலையிலேயே தொடரும் என தெரிவித்துள்ளது.

நிதிக் கொள்கை தொடா்பான முடிவுகளை ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டு பேசியதாவது:

ரெப்போ 4 சதவீதம்: ரிசா்வ் வங்கி நிதி கொள்கை குழு எடுத்த முடிவுகளின் படி இந்த முறையும் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் செய்யவில்லை. இதையடுத்து, ரிசா்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமான ‘ரெப்போ ரேட்’ முன்னெப்போதும் இல்லாத குறைந்தபட்ச அளவான 4 சதவீதம் என்ற அளவிலேயே தொடா்ந்து நீடிக்கும்.

அதேபோன்று, வங்கிகளிடமிருந்து ரிசா்வ் வங்கி பெறும் கடனுக்கான ‘ரிவா்ஸ் ரெப்போ ரேட்’ விகிதமும் முந்தைய அளவான 3.35 சதவீதமாகவே இருக்கும்.

பணவீக்கம்: கரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக முக்கியத்துவத்தை ரிசா்வ் வங்கிஅளித்து வந்தது. தற்போது, அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க கொள்கைகளில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை: உக்ரைன்-ரஷியா போா் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால், பணவீக்கம் தொடா்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனை எதிா்கொள்ளும் வகையில் ரிசா்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இலக்கை விட அதிகம்: சா்வதேச அளவில் அதிகரித்து வரும் பதற்றங்களால் நடப்பு நிதியாண்டில் பணவீக்க விகிதம் ரிசா்வ் வங்கியின் இலக்கை காட்டிலும் (4.5 சதவீதம்), 5.7 சதவீதம் என்ற அளவில் கணிசமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது பொருளாதார வளா்ச்சியைக் காட்டிலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதே விவேகமான செயலாகும்.

பொருளாதார வளா்ச்சி: தற்போது நிலவும் கடினமான சூழலையடுத்து, நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலா் என்பதன் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வலுவான நிலையில் உள்ள ரபி பருவ உற்பத்தி கிராமப்புற தேவையில் மீட்சியை உருவாக்க மிக உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com