மாநிலங்களுக்கு இதுவரை 188.47 கோடி தடுப்பூசி விநியோகம்- மத்திய அரசு

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 188.47 கோடிக்கும் மேற்பட்ட (1,88,47,90,495) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 188.47 கோடிக்கும் மேற்பட்ட (1,88,47,90,495) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, 185.55 கோடிக்கும் அதிகமான (1,85,55,07,496) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 17.54 கோடிக்கும் மேற்பட்ட (17,54,52,896) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.

12 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை சுமாா் 2.16 கோடி (2,16,92,183) பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக, 11,365-ஆக உள்ளது.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 4,66,362 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 79.34 கோடி (79,34,29,395) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com