முடக்கப்பட்ட யுஜியின் ட்விட்டர் கணக்கு மீட்பு!

மர்ம நபர்களால் முடக்கப்பட்ட யுஜிசியின் ட்விட்டர் கணக்கு சில மணி நேரங்களில் மீட்கப்பட்டது. கடந்த 3 நாள்களில் அரசின் அதிகாரப்பூர்வ 3 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 
யுஜிசி
யுஜிசி



மர்ம நபர்களால் முடக்கப்பட்ட யுஜிசியின் ட்விட்டர் கணக்கு சில மணி நேரங்களில் மீட்கப்பட்டது. கடந்த 3 நாள்களில் அரசின் அதிகாரப்பூர்வ 3 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) இணையதளத்துடன் ட்விட்டர் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தை சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் போர் பின்தொடரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த ட்விட்டர் கணக்கு சில மர்ம நபர்கள் முடக்கப்பட்டது. 

ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதும் அதில் அர்த்தமற்ற பதிவுகள், பல நபர்களை டேக் செய்யப்பட்டும், முகப்பு பக்கத்தில் கார்ட்டூன் படங்கள் வைக்கப்பட்டன. 

இந்நிலையில், யுஜிசியின் ட்விட்டர் கணக்கு தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும், சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகிய இரண்டு அரசு ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டன. 

 கடந்த 3 நாள்களில் மூன்றாவதாக முடக்கப்பட்ட  அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு யுஜிசி ட்விட்டர் கணக்காகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com