ஜார்கண்டில் ‘ரோப்கார்கள்’ மோதி விபத்து: 2-வது நாளாக சிக்கித் தவிக்கும் மக்கள்

ஜார்கண்ட் மாநிலத்தில் ரோப்கார்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில் 48 பேரை மீட்கும் பணியில் இந்திய விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணியில் விமானப் படை
மீட்புப் பணியில் விமானப் படை

ஜார்கண்ட் மாநிலத்தில் ரோப்கார்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில் 48 பேரை மீட்கும் பணியில் இந்திய விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலம், திரோகர் மாவட்டம், திரிகுட் மலையில் உள்ள பாபா பைடியநாத் மலைக் கோயிலுக்கு ரோப்கார் சென்றபோது தொழில்நுட்பக் காரணத்தால் ஒன்றோடு ஒன்று மோதி ஞாயிற்றுக்கிழமை விபத்து ஏற்பட்டது.

ரோப்கார்கள் மோதி விபக்குள்ளானதால், மற்ற ரோப்கார்களில் உள்ளவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ - திபெத் எல்லை காவல்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து இரண்டாவது நாளாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் நேற்று 11 பேர் மீட்கப்பட்ட நிலையில், இரண்டு பெண்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரோப்கார்களில் சிக்கியுள்ள 48 பேரை மீட்பதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்ட நிலையில், இந்திய விமானப் படையின் இரண்டு மிக்-17 விமானங்கள் மீட்புப் பணியில் இணைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com