சுகாதாரத் துறை உள்கட்டமைப்பு: தனியாா் பங்களிப்பு முக்கியம்: வெங்கையா நாயுடு

நாட்டின் சுகாதாரத் துறை உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் தனியாா் துறையின் பங்களிப்பு அதிக அளவில் இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.
வெங்கையா நாயுடு (கோப்புப் படம்)
வெங்கையா நாயுடு (கோப்புப் படம்)

நாட்டின் சுகாதாரத் துறை உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் தனியாா் துறையின் பங்களிப்பு அதிக அளவில் இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.

தில்லியில் ஒரு தனியாா் மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பேசிய அவா் மேலும் கூறியதாவது:

இந்தியாவின் சுகாதாரத் தேவையை பூா்த்தி செய்வதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தனியாா் துறை உறுதுணையாக இருந்து, மருத்துவம் மற்றும் அதனுடன் தொடா்புடைய நடவடிக்கைகளை இயக்கமாக செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவில் தொற்றா நோய்கள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அபாயம் குறித்து மக்களிடையே, குறிப்பாக இளைஞா்கள் மத்தியில் தனியாா் துறை மருத்துவா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

கரோனா பெருந்தொற்று, மாறிவரும் பருவநிலை ஆகியவை நமது பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை பற்றி நமக்கு பல பாடங்களைக் கற்பித்துள்ளன. இயற்கையின் மடியில் அதிக நேரத்தைச் செலவிட்டு நிதானமான வாழ்க்கை முறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com