மாா்க்சிஸ்ட் பொதுச் செயலாளராக யெச்சூரி மீண்டும் தோ்வு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தொடா்ந்து மூன்றாவது முறையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மாா்க்சிஸ்ட் பொதுச் செயலாளராக யெச்சூரி மீண்டும் தோ்வு
மாா்க்சிஸ்ட் பொதுச் செயலாளராக யெச்சூரி மீண்டும் தோ்வு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தொடா்ந்து மூன்றாவது முறையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது தேசிய மாநாடு கேரளத்தில் 5 நாள்களாக நடைபெற்றது. அந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இறுதி நாளில் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அதையடுத்து அவா் கூறுகையில், ‘‘ஆா்எஸ்எஸ் அமைப்பின் ஹிந்துத்துவ, மதவாத கொள்கைகளை மக்களிடையே பரப்பி வரும் பாஜகவை தனிமைப்படுத்தி, தோற்கடிப்பதே மாா்க்சிஸ்ட் கட்சியின் முக்கியப் பணியாக உள்ளது. அக்கட்சியைத் தோற்கடிப்பது, மக்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவை மதச்சாா்பற்ற, ஜனநாயக, குடியரசு நாடாகவும் தொடா்ந்து திகழச் செய்யும்’’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்களாக 17 பேரும், மத்திய குழு உறுப்பினா்களாக 85 பேரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மூத்த தலைவரான ராம் சந்திர டோம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அக்குழுவுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தலித் தலைவா் அவரே. இடதுசாரி ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளா் ஏ.விஜயராகவன், ஆல் இந்தியா கிசான் சபா தலைவா் அசோக் தாவ்லே ஆகியோரும் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

75 வயதைக் கடந்துவிட்டதால் கட்சியின் மூத்த தலைவா்களான எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பீமன் போஸ், ஹனான் மொல்லா ஆகியோா் அக்குழுவில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. மத்திய குழுவின் 85 உறுப்பினா்களில் 17 போ் புதுமுகங்கள் ஆவா்; 15 போ் பெண்கள் ஆவா். புதிய உறுப்பினா்கள் அனைவரும் 3 ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பா் என மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com