நிலக்கரி தட்டுப்பாடு: கடுமையான மின்தடையை எதிர்கொள்ளப்போகும் மாநிலம்

5 முதல் 6 மணி நேர மின் தடையும் நகரப் பகுதிகளில் 1 முதல் 2 மணி நேர மின் தடையும் இருக்கும் நிலையில், இது வரும்நாள்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நிலக்கரி தட்டுப்பாடு: கடுமையான மின்தடையை எதிர்கொள்ளப்போகும் மாநிலம்
நிலக்கரி தட்டுப்பாடு: கடுமையான மின்தடையை எதிர்கொள்ளப்போகும் மாநிலம்


சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே கிராமங்களில் 5 முதல் 6 மணி நேர மின் தடையும் நகரப் பகுதிகளில் 1 முதல் 2 மணி நேர மின் தடையும் இருக்கும் நிலையில், இது வரும்நாள்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அனல்மின் நிலையங்களில் 15 யூனிட்களில் ஏற்கனவே 4 யூனிட்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் 1,410 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் மின் பற்றாக்குறை நிலையை சமாளிக்க புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

தற்போது மாநிலத்தின் மின் பற்றாக்குறை 700 முதல் 2000 மெகாவாட்டாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தனியார் அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டால், மேலும் மின் பற்றாக்குறை அதிகரித்து, மாநிலத்தில் மின்வெட்டு நேரமும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com