கர்நாடக அமைச்சர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு

கர்நாடக ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக அமைச்சர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு
கர்நாடக அமைச்சர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு


மங்களூர்: பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கர்நாடக ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை வழக்கில், அமைச்சர் ஈஸ்வரப்பாவின் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர் பட்டியலில் முதல் பெயராக சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அமைச்சர் மீது லஞ்சப் புகார் அளித்த பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அது குறித்து அவரது சகோதரர் பிரஷாந்த் பட்டீல் அளித்த புகாரின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடுப்பியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த பிரஷாந்த் பட்டீல், தற்கொலை செய்து கொண்டார். பிரஷாந்த் அளித்திருந்த லஞ்சப் புகாரின் அடிப்படையில், அவரது தற்கொலை வழக்கில், அமைச்சர் ஈஸ்வரப்பாவின் அமைச்சக ஊழியர்கள் ரமேஷ், பசவராஜ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொதுப் பணித் துறை ஒப்பந்தம் ஒன்றை சந்தோஷ் பட்டீல் மேற்கொண்டிருந்த நிலையில், அதற்கு உரிய தொகையை அமைச்சகம் விடுவிக்காமல் இருந்தது. தொகையை விடுவிக்கக் கோரி சந்தோஷ் பல முறை வலியுறுத்தியும், தொகையை வெளியிட வேண்டும் என்றால் 40 சதவீதம் லஞ்சம் தர வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் கேட்டுள்ளனர்.  

இது குறித்து வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்த சந்தோஷ் பட்டீல், தற்கொலை செய்து கொண்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com