ஜார்கண்ட் ரோப் கார் விபத்து: வைரலாகும் விடியோ

ஜார்க்கண்டில் ரோப் கார்கள் விபத்து ஏற்பட்ட விடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ஜார்கண்ட் ரோப் கார் விபத்து: வைரலாகும் விடியோ

ஜார்க்கண்டில் ரோப் கார்கள் விபத்து ஏற்பட்ட விடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாத் கோயிலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் திரிகூட மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, 2 ரோப் காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், அனைத்து ரோப் காா்களும் நடு வழியில் அந்தரத்தில் சுமாா் 100 அடி உயரத்தில் நின்று விட்டன.

பின்னர் 2 ஹெலிகாப்டா்களில் வந்த விமானப் படையினா், மீட்புப் பணியை துரிதப்படுத்தினா். ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 11 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. ரோப் காா்களில் சிக்கித் தவித்தவா்களுக்கு ஆளில்லா விமானங்கள்(ட்ரோன்) மூலமாக, உணவு, குடிநீா் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து 44 மணி நேர மீட்புப் பணியில் இதுவரை 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட ரோப் காரில் பயணம் செய்தபோது அதிலிருந்த பயணி ஒருவர் எடுத்த விடியோவில் ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

தற்போது அந்த காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com