சீனாவில் புதிதாக 3,472 பேருக்கு தொற்று  

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,472 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
சீனாவில் புதிதாக 3,472 பேருக்கு தொற்று  

பெய்ஜிங்: சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,472 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளில் 50 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 62 லட்சம் பேர் தொற்றின் தீவிரத்தால் பலியாகியுள்ளனர்.

தொற்று கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை 174,868    பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,638 பேர் உயிரிழந்துள்ளனர், 24,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,472 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,  சீனாவின் பொருளாதார மையமான ஷாங்காய் 3,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஷாங்காயைத் தவிர, சீனாவின் 20 மாகாணங்கள் மற்றும் நகரங்களில் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மார்ச் முதல் கடுமையான பயணத் தடைகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால்  25 மில்லியன் மக்கள் அவர்களின் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். 

இதனிடையே செய்தித் தொடர்பாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர்  ஜாவோ லிஜியன், சீனாவில் வசிக்கும் சீன மற்றும் வெளிநாட்டினரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை திறம்பட பாதுகாத்துள்ளனர் மற்றும் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளனர் என்று சர்வதேச சமூகம், உலக சுகாதார அமைப்பு உயர்வாகப் பேசியுள்ளது" என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com