அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும்: பிரதமர்

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையால் அடுத்த 10 ஆண்டுகளில்
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையால் அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

குஜராத்தில் 1,100 இடங்களுடன் கூடிய 9 மருத்துவ கல்லூரிகளே இருந்தன.  ஆனால் இன்று 6 ஆயிரம் இடங்களுடன் கூடிய 36 மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

பிரதமர் மோடி கரோனா தொற்று இன்னும் நீங்கவில்லை என்றும், மக்கள் அதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார். இந்தியாவில் தோன்றிய யோகா மற்றும் ஆயுர்வேதம் தொற்று நோய்களின் போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றார்.

உலகெங்கிலும் உள்ள மக்கள் அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்ததால், தொற்று நோய்களின் வருகைக்குப் பிறகு இந்தியாவில் இருந்து மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றார்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தின் போது, ​​கட்ச் மாவட்டத்தில் உள்ள குடிமக்கள் அதிகபட்ச பங்கேற்பை உறுதி செய்து உலக சாதனை படைக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com