வானில் தோன்றும் இளஞ்சிவப்பு நிலா: எப்போது தெரியும்?

சித்திரை மாத பௌர்ணமி என்றாலே அது வெகு சிறப்புதான். அதனுடன், சித்திரை மாதத்தில் பௌர்ணமியன்று வானில் தோன்றும் அந்த இளஞ்சிவப்பு நிலாவைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும்.
வானில் தோன்றும் இளஞ்சிவப்பு நிலா
வானில் தோன்றும் இளஞ்சிவப்பு நிலா


சித்திரை மாத பௌர்ணமி என்றாலே அது வெகு சிறப்புதான். அதனுடன், சித்திரை மாதத்தில் பௌர்ணமியன்று வானில் தோன்றும் அந்த இளஞ்சிவப்பு நிலாவைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும்.

இந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை அந்த அழகிய தரிசனம் நமக்கு வாய்க்கப் பெறவிருக்கிறது.

இரவு முழுக்க, இந்த இளஞ்சிவப்பு நிற நிலவை பார்க்க முடியாது. அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தோன்றும், அதற்கு முன்பு, காலநிலை மற்றும் மேகக் கூட்டங்களின் மாற்றத்தால் அது பல வண்ணங்களில் காட்சியளிக்கக் கூடும்.

வெள்ளிக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை வரை அது பௌர்ணமி போல பெரிதாகக் காட்சியளித்தாலும், நள்ளிரவு 12.25 மணிக்கு மட்டுமே வெளிர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்றதொரு பௌர்ணமி நாள், எப்போதாவது ஒரு முறை மட்டுமே வாய்க்கப்பெறும். அதாவது, சூரியன், பூமி, நிலவு என அனைத்தும் 180 டிகிரிக் கோட்டில் வரும் போது இது நிகழ்கிறது. நிலவின் சுற்றுப்பாதையானது, பூமியின் சுற்றுப்பாதையை விட 5 டிகிரி வேறுபட்டு இருக்கும். இதனால், வழக்கமாக, பூமியின் நிழலைக் காட்டிலும், நிலவின் நிழல் வேறுபட்டுத் தெரியும். இதுபோன்ற வேளையில் சூரியனின் கதிர்கள், நிலவுக்கு அருகே அல்லது பூமியை சந்திக்கும் பக்கத்தை ஒளிரச் செய்யும்.

இதுபோலத்தான், பூமியின் நிழல் நிலவின் மீது விழும் போது சந்திர கிரகணம் தோன்றுகிறது. அடுத்த சந்திரகிரகனம் மே மாதம் 15-16ஆம் தேதி நிகழவிருக்கிறது.  மே மாதம் நிகழும் முழு சந்திரகிரகனம் வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளில் தெரியும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com