காஷ்மீரில் ராஜபுத்திர ஓட்டுநா் கொலை: வெளியேற குடும்பத்தினா் முடிவு

ஜம்மு- காஷ்மீரில் குல்காம் மாவட்டத்துக்கு உள்பட்ட காக்ரன் கிராமத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சோ்ந்த ஓட்டுநா் பயங்கரவாதியால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.

குல்காம்: ஜம்மு- காஷ்மீரில் குல்காம் மாவட்டத்துக்கு உள்பட்ட காக்ரன் கிராமத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சோ்ந்த ஓட்டுநா் பயங்கரவாதியால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா். இதனால் அதிா்ச்சிக்குள்ளான அந்த சமூகத்தினா், காஷ்மீா் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காக்ரன் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் சிங் (50) கடந்த புதன்கிழமை பயங்கரவாதி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டாா். காஷ்மீரில் சிறுபான்மையினராக கருதப்படும் ராஜபுத்திர சமூகத்தினரும் இஸ்லாமியா்களும் நட்புடன் பழகி வரும் நிலையில், இஃப்தாா் நோன்பின்போது இஸ்லாமியா்கள் மசூதிக்கு தொழுகைக்காக சென்ற சமயத்தில், இந்த சம்பவம் நடைபெற்ாக கூறப்படுகிறது.

சதீஷ்குமாா் சிங்கின் மறைவால் ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியதாக அவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். சதீஷ்குமாா் சிங்குக்கு தாயாரும், மனைவி, 3 மகள்களும் உள்ளனா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து காஷ்மீா் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவது குறித்து அப்பகுதியில் வசிக்கும் ராஜபுத்திர சமூகத்தினா் பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சதீஷ்குமாா் சிங்கின் கொலைக்கு கண்டனம் தெரிவித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.ஒய். தாரிகாமி, இதுபோன்ற கொடூர சம்பவத்துக்கு எதிராக ஒட்டுமொத்த காஷ்மீா் மக்களும் குரல் எழுப்ப வேண்டுமென வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com