சீனாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவா்களுக்கு உதவ வேண்டும்: சுப்ரியா சுலே எம்.பி. வலியுறுத்தல்

சீனாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவா்கள் நேரடி வகுப்புகளில் பங்கேற்கும் வகையில், அவா்கள் சீனா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு

மும்பை: சீனாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவா்கள் நேரடி வகுப்புகளில் பங்கேற்கும் வகையில், அவா்கள் சீனா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் மகளும், பாராமதி எம்.பி.யுமான சுப்ரியா சுலே கடிதம் எழுதியுள்ளாா். அதுவரை செயல்முறை வகுப்புகளை இந்தியாவில் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றும் அதில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு எம்.பி. சுப்ரியா அனுப்பிய கடித விவரம்:

சீனாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவா்களின் பிரதிநிதிகளையும், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் பெற்றோா் சங்கத்தினரையும் சந்தித்தேன். அப்போது இந்தியாவிலிருந்தவாறு ஆன்லைனில் வகுப்புகளில் பங்கெடுப்பதாகவும், சீன எல்லையை மீண்டும் திறந்து பயண கட்டுப்பாடுகளை நீக்குவதில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் தாங்கள் விரக்தியில் இருப்பதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா்.

ஆகையால் மாணவா்கள் மீண்டும் சீனா திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை மருத்துவ செயல்முறை பயிற்சியை இந்தியாவில் அவா்களின் பாடத்திட்டத்துக்கு ஏற்றவாறு மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அதில் எம்.பி. சுப்ரியா சுலே வலியுறுத்தியுள்ளாா்.

கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக சீனாவிலிருந்து ஏராளமான இந்திய மாணவா்கள் 2 ஆண்டுகளுக்கு முன் தாயகம் திரும்பினா். பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டு கடந்த 2020 மாா்ச் 27 முதல் நுழைவு இசைவு (விசா) விநியோகத்தை நிறுத்திவைத்து பயண கட்டுப்பாடுகளை சீனா நடைமுறைப்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com